'பிஎஸ்-4' வாகனங்களை பதிவு செய்ய தடை; உத்தரவை நீட்டித்தது சுப்ரீம் கோர்ட்

Updated : ஆக 02, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
BS4 vehicles, Supreme Court, SC, சுப்ரீம் கோர்ட், பிஎஸ்4 வாகனங்கள்

புதுடில்லி : 'ஊரடங்கு காலத்தில், 'பி.எஸ்., - 4' வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, முடிவு எட்டப்படும் வரை, அந்த வாகனங்களை பதிவு செய்ய, பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ்., என்பது, 'பாரத் ஸ்டேஜ்' என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில், 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த, 2017 ஏப்ரல், 1 முதல், நாடு முழுதும், பி.எஸ்., - 4 வாகனங்கள் மட்டுமே, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகை வாகனங்களை, 2020 மார்ச், 31 வரை மட்டுமே விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது.


10 நாட்கள்


இந்நிலையில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25ல் இருந்து, நாடு முழுதும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 'ஊரடங்கு காலத்தில், பி.எஸ்., - 4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விற்பனை ஆகாத வாகனங்களை, உற்பத்தியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, வாகன விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மார்ச், 24ல், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விற்பனை ஆகாத வாகனங்களில், 10 சதவீத வாகனங்களை, விற்பனை மற்றும் பதிவு செய்ய, ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், 10 நாட்களுக்கு அனுமதி அளித்தது.


விசாரணை


ஆனால், வாகன விற்பனையாளர்கள், ஊரடங்கு காலத்திலேயே, 'ஆன்லைன்' வாயிலாக, 10 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக மார்ச், 29, 30, 31 மற்றும் அதற்கு பின்னும், அதிக எண்ணிக்கையிலான, பி.எஸ்., - 4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ஊரடங்கு தளர்வுக்குப் பின், வாகன விற்பனை மற்றும் பதிவு செய்ய வழங்கப்பட்ட, 10 நாட்கள் அவகாசத்தை, கடந்த, 8ல், உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றது.

இந்நிலையில், வாகன விற்பனையாளர்களின் மனு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி, 10 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களை, ஊரடங்கு காலத்திலேயே விற்றதற்கு, நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.


எச்சரிக்கை


'மொத்தம், 1.05 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2.55 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை, ஊரடங்கு காலத்திலேயே விற்ற விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர்.

'ஊரடங்கு காலத்தில், 'பி.எஸ்., - 4' வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, முடிவு எட்டப்படும் வரை, அந்த வாகனங்களை பதிவு செய்ய, பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும்' எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.--------------------------

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
01-ஆக-202007:52:51 IST Report Abuse
blocked user புதிதாக வாகனங்களை வடிவமைக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
01-ஆக-202003:52:26 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை 'பாரத் ஸ்டேஜ்' என்பதின் சுருக்கம்? எப்ப பாத்தாலும் பாரத் பாரத் ன்னு சொல்ராங்களே ? யார் அந்த பாரத்? இந்தியா வேற பாரத் வேறயா ? ஒரு நாட்டுக்கு ரெண்டு பேர் தேவையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X