மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில்மேலும் நால்வருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில்மேலும் நால்வருக்கு கொரோனா

Added : ஜூலை 31, 2020
Share

சிறுபாக்கம்; மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் பணி புரிந்த இரண்டு ஊழியர்களுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.அங்கு பணிபுரிந்த மேலும் 4 ஆண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நால்வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மங்களூர் ஒன்றியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X