பொது செய்தி

தமிழ்நாடு

வடலுார் கல்வி மாவட்டத்தில் 94.19 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

வடலுார்; பிளஸ் 1 தேர்வில் வடலுார் கல்வி மாவட்டம், மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தது.கடலூர் வருவாய் மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. பிளஸ் 1 தேர்வில் வடலுார் கல்வி மாவட்டம் 94.19 சதவீதம் பெற்று, கடலுார் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தது. வடலுார் கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகள் 88.54 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.8 சதவீதம், அரசு உதவி (பகுதி) பெறும் பள்ளிகள் 95.5 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள் 99.39 சதவீதம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி 71.7 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றன.கடலுார் மாவட்டத்தில் 94.35 சதவீதம் பெற்று முதலிடத்தை கடலுார் கல்வி மாவட்டமும், 93.67 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தை சிதம்பரமும், 90.88 சதவீதம் பெற்று கடைசி இடத்தை, விருத்தாசலம் கல்வி மாவட்டமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X