மங்களம் அருளும் வரலட்சுமி வழிபாடு: கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மங்களம் அருளும் வரலட்சுமி வழிபாடு: கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

Added : ஜூலை 31, 2020
Share
 மங்களம் அருளும் வரலட்சுமி வழிபாடு: கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆடி மாதம், அம்பாளின் அருளை பெறவும், அஷ்ட லட்சுமிகள் வீட்டில் வாசம் செய்யவும், பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, சிறப்பு பூஜை நடத்துகின்றனர்.வீட்டில், லட்சுமிதேவியை அலங்கரித்து, பூ, பழம், மாங்கல்ய சரடு, கண்ணாடி என படைத்து, சுமங்கலி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், சுவாமிகளுக்கு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பூமிலட்சுமி அம்பாளுக்கு, பால், பன்னீர் உட்பட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, பச்சை நிற பட்டுடுத்தி, பூமிலட்சுமி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் கோவில், கல்பனா ரோடு காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில், ஆண்டாள் சீனிவாசன் வீதி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், பத்ரகாளியம்மன் கோவில் உட்பட அனைத்து அம்பாள் கோவில்களிலும், ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சிபொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.பெண்கள் சமூக இடைவெளி பின்பற்றி, மஞ்சளில் அம்மன் உருவம் படைத்து, விளக்கு ஏற்றி, மஞ்சள் சரடு அணிந்து வழிபாடு செய்தனர்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி, ஒன்பது வகையான அபிேஷகம், ஒன்பது வகையான மலர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார வழிபாடும் நடந்தது. வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.இதே போல், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.


- நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X