பொது செய்தி

தமிழ்நாடு

கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது தனியார் பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

கடலுார்; கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதன்மைக் கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என, தனியார் பள்ளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் மாதத்திற்குள் 40 சதவீதமும், வகுப்புகள் துவங்கிய பிறகு 35 சதவீதமும் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சி.இ.ஓ., ரோஸ் நிர்மலா, தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்திய பொது முடக்க காலத்தில் பள்ளி மாணவர்களிடம் 2019-20ம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம், 2020-21ம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டணத்தை செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என, மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், கடலுார் மாவட்டத்தில் சில மெட்ரிக் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திப்பதாக புகார் வந்துள்ளது. அரசு உத்தரவை மீறி கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X