பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாமல் சென்றவாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதியில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.மந்தாரக்குப்பம் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் இறந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மந்தாரக் குப்பம் கடைவீதியில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் கிருஷ்ணமூர்த்தி, சகாதேவன், கிருஷ்ணமூர்த்தி, கோபால் உள்ளிட்டவர்கள்தலா ரூ. 100 அபராதம் விதித்து வாகன ஒட்டுனர்களை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X