நகராட்சி சீர்கேட்டை கண்டித்து தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி சீர்கேட்டை கண்டித்து தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 31, 2020
Share

சிதம்பரம்; சிதம்பரம் நகாட்சியின் சீர்கேட்டை கண்டித்து தி.மு.க., சார்பில் 33 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் நகராட்சி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் வருவது, புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கு வரைமுறை இல்லாமல் பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை கண்டித்து நேற்று தி.மு.க., சார்பில் அனைத்து வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரம் மேலவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் விஜயராகவன் முன்னிலை வகித்தார். இதே போல் 33 வார்டுகளிலும் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பச்சையப்பா பள்ளி அருகில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன் தலைமையிலும், 24வது வார்டில் ரமேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X