பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு பொருட்களுடன் முட்டை வழங்க கோரிக்கை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

உடுமலை:மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களுடன் முட்டையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள, குழந்தைகள் பலருக்கும், பள்ளிகளில் சத்துள்ள உணவு வழங்கப்படுகிறது. தற்போது, பள்ளிகள் விடுமுறையால், குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் தடைபடாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுத்தது.இதில், மாணவர்களுக்கான அளவு அடிப்படையில் சத்துணவுக்கான அரிசி மற்றும் பருப்பு, அவர்களது குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என இம்மாதம் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது.பள்ளிகளிலும், இருப்பு இருந்த அரிசி மற்றும் பருப்பு முதற்கட்டமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விடுபட்ட மாணவர்களுக்கும் வழங்குவதற்கு, பள்ளிகளுக்கு அரிசி, பருப்பு அனுப்பப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், விடுபட்ட மாணவர்களை அழைத்து, சத்துணவு பொருட்கள் வழங்கவும், ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகளுக்கான கல்வி கிடைப்பதற்கும், சத்துணவுக்கான பொருட்களையும் கட்டாயம் அவர்கள் பெற வேண்டும் என அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், முட்டை போன்ற சத்துள்ள உணவு பொருள் பள்ளியில் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் வழங்கப்படுவது போல், குழந்தைகளுக்கு முட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X