தமிழ்நாடு

மாவட்டத்தில் 2 நாட்கள் மீன் பிடிக்க, விற்க தடை

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 மாவட்டத்தில் 2 நாட்கள் மீன் பிடிக்க, விற்க தடை

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றும், நாளையும் மீன்கள் பிடிக்கவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் ஞாயிற்று கிழமைகளில் இருந்து தளர்வுகளின்றி ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு கடைபிடிக்கும் முதல் நாளில் மீன் சந்தைகள், இறைச்சி கடைகள், காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது.குறிப்பாக, கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் தனிமனித சமூக இடைவெளி நடைமுறையை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் மக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.அதே சமயம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று 1ம் தேதி முதல், நாளை 2ம் தேதி வரை இரண்டு நாட்கள் கடலுார் மாவட்டத்தில் மீன்கள் பிடிக்க கடலுக்கு செல்லவும், மீன்களை விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மீனவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப் படுத்த உதவும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மீறி மீன் விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நோட்டீஸ் மூலம் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன் மீன்பிடி துறைமுக பகுதிகள், மீன் விற்பனை மார்க்கெட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X