பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சிதம்பரம்; வீடு வீடாக நோய் தொற்று குறித்து சோதனை மேற்கொண்டு கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கலெக்டர் கூறினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் நேற்று கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பாதித்த நோயாளியுடன் வீடியோ கால் மூலம் பேசி விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இதுவரை 47 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,925 பேருக்கு தொற்று உள்ளது. அதிலும் 1, 811 பேர் குணமாகினர். மேலும் 1080 பேர் சிகிச்சையில் உள்ளனர். ராஜா முத்தையா மருத்துவமனையில் 150 பேர் சிகிச்சையில் உள்ளனர். 200 படுக்கைகள் உள்ளன. 80 படுக்கைகள் தயார் செய்யப்படுகிறது.வீடு வீடாக பரிசோதனை செய்வதால் நோய் தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கின்றனர். இதன் மூலம் நோய் தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். நேற்றைய தினம் 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியும். ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை போக்க தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.பதிவாளர் ஞானதேவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், டி.எஸ்.பி., கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X