ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 31, 2020
Share

கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கறுப்பு பட்டை அணிந்து கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ரங்கசாமி, நாராயணசாமி, மோகன்குமார், செந்தில்முருகன், வெங்டேசன், பார்வதி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் சந்திரசேகரன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் மகாலிங்கம், பொருளாளர் ரவிச்சந்திரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ரஹீம் கண்டன உரையாற்றினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருசாமி,சுமதி, நடராஜன், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கொரோனா பரவலால் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நோய்தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும் என்பதுஉட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X