பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் 5 பேருக்கு தொற்று

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; துபாயிலிருந்து 19 பேர் சங்கராபுரம் வந்தனர்.சங்கராபுரம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் துபாயில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்தவர்களில் 19 பேர் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் பஸ் மூலம் சங்கராபுரம் வந்த அவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் சம்பத்குமார் தலைமையிலான மருத்துவக் குழு அவர்களை பரிசோதனை செய்தனர்.தனிமை முகாமில் தங்கியிருந்தவர்களில் தொற்று இல்லாத 30 பேர் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.5 பேருக்கு தொற்றுசங்கராபுரம் மைல்கல் தெருவைச் சேர்ந்த சிலருக்கு கடந்த சில நாட்களாக தொடர் இருமல், சளி, காய்ச்சல் இருந்து வந்தது. அவர்களை பரிசோதித்ததில் 25, 58, 80 வயது பெண்களுக்கும்; பூட்டை ரோட்டைச் சேர்ந்த 48 வயது ஆண் மற்றும் 20 வயது பெண் என 5 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று பாதித்த நபர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X