கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கில் தி.மு.க., 'மாஜி' விடுதலை

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : சிறுமி பாலியல் வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு விதிக்கப்பட்ட, 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.

கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், பெரம்பலுார் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜ்குமார் வெற்றி பெற்றார். 2006 - 11ம் ஆண்டில், எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.கேரள மாநிலம், பீர்மேடு பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, வீட்டு வேலைக்காக, 2012 ஜூனில், ராஜ்குமார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வேலைக்கு சேர்ந்த சில நாட்களில், தாயை தொடர்பு கொண்டு, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், அழைத்து செல்லும் படியும், சிறுமி கூறியுள்ளார். மகளை அழைத்து செல்ல, பெரம்பலுாருக்கு பெற்றோர் வந்தனர்.உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்கு சென்று பெற்றோர் பார்த்த போது, சுயநினைவின்றி சிறுமி இருந்துள்ளார். இரண்டு நாட்களில், சிறுமி மரணம் அடைந்தார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, பெற்றோர் அளித்த புகாரில், பெரம்பலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், அவரது நண்பர் ஜெய்சங்கர் உள்ளிட்ட, ஏழு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெரம்பலுார் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் இறந்து விட்டார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., என்பதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு, இந்த வழக்கு மாற்றப்பட்டது.வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமாருக்கு, 10 ஆண்டுகள்; ஜெய்சங்கருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மற்றவர்களை விடுதலை செய்தது. 2018 டிசம்பரில், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கரும், மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். இருவர் சார்பிலும், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர்கள் ஆர்.விவேகானந்தன், ஆர்.விஜயகுமார் ஆஜராகினர்.இருவருக்கும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதி சதீஷ்குமார் ரத்து செய்தார். இருவருக்கும் எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும், விடுதலை செய்வதாகவும், வேறு எந்த வழக்கிலும், இவர்கள் தேவைப்படவில்லை என்றால், உடனடியாக விடுதலை செய்யவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-ஆக-202010:21:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஊழல் வழக்குகளிலேயே விடுதலையான திமுகவினருக்கு குறுக்கு வழிகள் நன்கு தெரியும். துப்பாக்கி ஆயுதம் வைத்திருந்த MLA கூட விடுதலையாவார் பாருங்கள்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஆக-202008:04:17 IST Report Abuse
Bhaskaran புனிதன் ஆயிட்டாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X