பொது செய்தி

தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்எஸ்.பி., ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால், பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., ஜியாவுல் ஹக் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., சங்கர் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயம் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் உசேன், செயலர் சர்புதீன், ஜிம்மா பள்ளி வாசல் ஆலோசனை கமிட்டி செயலர் ஜானி, ஜமா அத் தலைவர் பக்ரிமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபடக்கூடாது, வீடுகளிலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்த வேண்டும். மேலும், குர்பானி எப்படி வழங்குவது என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X