பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மாதிரி பள்ளிகள் 'சென்டம்'

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய 19 ஆயிரத்து 652 மாணவர்களில் 18 ஆயிரத்து 79 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் என 116 உள்ளன. கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 4,791 மாணவர்கள், 4,693 மாணவிகள், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் 3,041 மாணவர்கள், 3,248 மாணவிகள், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 1,780 மாணவர்கள் 2,099 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 652 பேர் கடந்த கல்வியாண்டில் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வினை எழுதினர். இதில் 8,577 மாணவர்கள், 9,502 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 79 பேர் தேர்ச்சி பெற்றனர்.மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 89.23. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.64. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.99. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.47. தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 99.30. இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.பெரியசிறுவத்துார், மூலக்காடு, வேலுார், அ.குமாரமங்கலம், சித்தால் ஆகிய ஐந்து மாதிரி பள்ளிகளும், 20 தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X