மாணவர் தூக்குமாட்டி தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் தூக்குமாட்டி தற்கொலை

Added : ஜூலை 31, 2020
Share

திருப்பூர்:திருப்பூரில், தந்தை திட்டியதால், பள்ளி மாணவன் துாக்குமாட்டி தற்கொலை செய்தார்.திருப்பூர், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கனகராஜ் - மாலதி தம்பதியர். இவர்கள், திருப்பூரில் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநாத், 15 என்ற மகனும், சஞ்சனா, 5 என்ற மகளும் உள்ளனர். மகன் அருகே உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்பு செல்ல உள்ளார்.நேற்று முன்தினம் தம்பதியர், மகளை அழைத்து கொண்டு வியாபாரம் செய்ய கிளம்பினர். அப்போது, ஸ்ரீநாத், தானும் வருவதாக அடம்பிடித்தார். சத்தம் போட்ட கனகராஜ், வீட்டில் விட்டு, விட்டு சென்றனர்.வியாபாரம் முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பிய போது, ஸ்ரீநாத் துாக்குமாட்டி இறந்து கிடந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X