பொது செய்தி

இந்தியா

புதிய கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை: வரைவுக் குழு தலைவர்

Updated : ஆக 02, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பெங்களூரு: ''அடுத்த தலைமுறையினரை மனதில் கொண்டு, அவர்களது வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும், தரத்தில் சமரசமின்றியும், புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது,'' என, 'இஸ்ரோ' முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான, கஸ்துாரி ரங்கன் தெரிவித்தார். பல மாற்றங்கள்இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில்,
NEP 2020, NEP, New Education Policy, புதிய கல்விக் கொள்கை, வரைவுக் குழு தலைவர், கஸ்துாரி ரங்கன்

பெங்களூரு: ''அடுத்த தலைமுறையினரை மனதில் கொண்டு, அவர்களது வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும், தரத்தில் சமரசமின்றியும், புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது,'' என, 'இஸ்ரோ' முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான, கஸ்துாரி ரங்கன் தெரிவித்தார்.


பல மாற்றங்கள்


இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, சுலபமான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்பு திறன் சேர்க்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான கஸ்துாரி ரங்கன், நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இளநிலை பட்டப்படிப்பை, எளிதானதாகவும், பல்வேறு பாடங்கள் கொண்டதாகவும், நான்கு ஆண்டுகள் கொண்ட படிப்பாகவும் மாற்றியுள்ளதன் வாயிலாக, மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இது, 21ம் நுாற்றாண்டுக்கான திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும்.

பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, கல்வி கற்றலை சரியான பாதையில் செலுத்தவும், கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தவும், சமரசமற்ற கல்வி தரத்தை வழங்குவதுமே, இந்த புதிய கல்வி திட்டத்தின் நோக்கம்.


குழந்தையின் திறன்


ஆரம்ப கல்வியை பொறுத்தவரை, குழந்தைகளுக்கு, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியில் கற்பிப்பது முக்கியமாகும். ஏனெனில், கருத்துகளை புரிந்துகொள்வது மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதில், தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியில் கல்வி கற்பதன் மூலம் மட்டுமே, குழந்தையின் திறன் சிறப்பாக வெளிப்படும்.

அதேநேரத்தில், குழந்தைகள் தங்கள் இளம் வயதில், ஏராளமான மொழிகளை கற்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இந்த நேரத்தில், மும்மொழிக் கொள்கையில், நெகிழ்வான அணுகுமுறையை கல்விக் கொள்கை பேசுகிறது.எனினும், இதுகுறித்து மாநில அரசுகள், சொந்தமாக முடிவெடுத்து, அதை அமல்படுத்தி கொள்ளலாம். கல்விக் கொள்கையில் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


பிரதமர் மோடி இன்று உரை


புதிய கல்விக் கொள்கை குறித்து, பிரதமர் மோடி, இன்று மாலை, 4:30 மணிக்கு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில், 'கொரோனா' பாதிப்பு, 'ரபேல்' போர் விமான வருகை உள்ளிட்டவை குறித்தும், அவர் குறிப்பிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மாணவர்கள் பங்கு பெறும், 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' இறுதிப் போட்டி, இன்று நடைபெறுகிறது. 'ஆன்லைன்' வாயிலாக நடைபெறும் இறுதிப் போட்டியில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாணவர்கள் மத்தியில், மோடி உரையாற்ற உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
01-ஆக-202023:41:39 IST Report Abuse
unmaitamil இந்த திருட்டு கழக கயவர்கள் நடத்தும் பள்ளிகளில் CBSC, சிலபஸ், மும்மொழி பாட முறை. இவனுங்க பிள்ளைகள் படிப்பது CBSC, பள்ளி. ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் சாதாரண உருப்படாத சமசீர் கல்வி ???? முதலில் இவர்கள் பள்ளிகளில், இவர்கள் பிள்ளைகளில் இவர்கள் கொள்கை தொடங்கட்டும். எல்லோரும் முன்னேறுவதை தடுக்கும் துரோகிகள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
01-ஆக-202015:38:12 IST Report Abuse
கொக்கி குமாரு எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பவர்கள் யாரென்றால், ஊழல்களின் தந்தை என்று அழைக்கப்படும் தலீவர் கலைஞர் அவர்களின் தவப் புதல்வர் சுடலையார், சுடலையாரின் அடிமைகள் மற்றும் அல்லக்கைகள், ஓசி சோறு 1 வீரமணி, ஓசி சோறு 2 சுபவீ, அரசியல் குருமா, ராசியில்லாத சைக்கோ, காசு கொடுத்தால் எங்கு வேண்டுமானாலும் ஓடிவிடும் கம்யூனிஸ்ட் இவர்கள் மட்டுமே. இதிலிருந்து தெரியவில்லையா. எந்த சமரசமும் வேண்டாம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துங்கள். எதிர்ப்பவர்களுக்கு என்ன பயம்னா, வருங்கால சந்ததியினர், மாணவர்கள் நன்கு படித்துவிட்டால் இவர்கள் வண்டவாளமெல்லாம் வெளியில் தெரிந்து இவர்களின் கட்சியே இல்லாமல் ஆகிவிடும். பிறகு எப்படி மக்களை ஏமாற்றி, ஊழல்கள் பல செய்து பிழைப்பு நடத்துவது. அந்த பயம் அவர்களுக்கு.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஆக-202014:52:05 IST Report Abuse
ஆரூர் ரங் நிலம் நீச்சுக்களை விற்று அண்ணா யுனிவர்சிட்டியில் B Tech படிச்சவன் இப்போ பால் பாக்கெட் போடுகிறான். கூரியர் வேலை பார்த்து 5000 சம்பாதிக்கிறான். லீவு போட்டால் வேலை போய்விடும் எட்டாங்கிளாஸ் மட்டுமே படித்த பீஹார் வங்காளி சென்னையில் தச்சர் பீட்டர் எலெக்ட்ரிக்கல் வேலை பார்த்து அன்றாடம் ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறான். நினைத்த அன்று ஓய்வு. பள்ளியில் கைத்தொழில் கற்பிப்பதை மட்டமாக தரக்குறைவாக விவாதிக்கும் திராவிஷன்களை துரத்தியடியுங்க. எல்லோருக்கும் ஆபீசர் வேலை கிடைக்கவைக்கும் கல்வி எந்த நாட்டிலும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. படிப்பில் சுமாராக இருக்கும் மாணவர்களுக்கு வோகஷனல் கோர்ஸ் உலகம் முழுவதும் உள்ளதுதான் .வியர்வை சிந்தும் உழைப்பைக் கேவலமாக நினைக்கும் மனோபாவம் மாறவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X