சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை மாற்றியுள்ளேன்!

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை மாற்றியுள்ளேன்!

மாற்றுத்திறனாளிகளின் திறமையை கண்டறிந்து, தனியார் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும், 'எனேபிள் இந்தியா' என்ற நிறுவனத்தின் தலைவர் சாந்தி ராகவன்: பிறந்தது, தமிழகத்தின் சேலம். வளர்ந்தது பெங்களூர். மும்பையில் இன்ஜினியரிங் முடித்து, அமெரிக்காவில், எம்.எஸ்., படித்தேன்.பல முன்னணி நிறுவனங்களில், பல ஆண்டுகள் பணியாற்றினேன். 1997ல் பெங்களூர் திரும்பினேன். என் தம்பி, ஹரி ராகவனுக்கு இருந்த பார்வை குறைபாடு பிரச்னை அதிகரித்து விட்டது.

அதற்கான சிகிச்சைக்காக, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றேன்.அப்போது தான், மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அவர்களின் திறமை போன்றவற்றை கண்டறிந்தேன். இனிமேல், மாற்றுத்திறனாளிகளுக்கு நல்வாழ்வு அமைவதற்காக, பாடுபட வேண்டும் என முடிவு செய்து, 1999ல், எனேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்தை துவக்கினேன். ஓய்வு நேரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை பெற்றுத் தர பாடுபட்டேன்.

தொடர்ந்து பலமுறை முயற்சி செய்த பின் தான், மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு எடுக்க, நிறுவனங்கள் முன்வந்தன. அப்போது தான், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தினால் தான், அவர்களுக்கு வேலை எளிதாக கிடைக்கும் என்பதை அறிந்து, திறன்களை வழங்க முடிவு செய்தேன்.அதன்பின், சிறிதும், பெரிதுமாக, பல மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கிடைத்தது. அதன்பின், 2004ல், வேலையிலிருந்து விலகி, முழு நேரமாக, சமூக சேவையில் ஈடுபடுகிறேன். இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன்.

அவர்களின் கல்வி, திறமையின் அடிப்படையில், சில ஆயிரம் ரூபாய் முதல், ௨௦ லட்சம் ரூபாய் வரையிலான சம்பளம் பெறும் வேலைகளில் அவர்கள் அமர்த்தப்பட்டனர். கர்நாடக மாநில அரசுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து வருகிறேன். அதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.எனக்கு எல்லா விதங்களிலும் உதவியாக இருப்பவர், என் கணவர் தீபேஷ் சுதாரியா. தனியார் நிறுவனம் ஒன்றில், உயர் பொறுப்பில் இருந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன், அந்த வேலையை விட்டு, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

எங்கள் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி அவர் தான்.மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்வது இது தான்... 'உங்களின் உடல் குறைபாட்டை எண்ணி, வீட்டுக்குள் முடங்கி விடாதீர்கள். புறக்கணிப்புகளை புறந்தள்ளி, திறமையால் வெற்றி பெற வேண்டும்!'தொடர்புக்கு: பெங்களூரு எண்: 80673 23636

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்துரு, பெங்களூர் மிகப் பெரிய சாதனை. எந்த சாதனைகளையும் விட உயர்ந்த சாதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X