சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோர்ட் திறக்க வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

திருப்பூர்:கோர்ட் செயல்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில், கோர்ட்களை திறக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் சப்-கோர்ட் வளாகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு துணை தலைவர் சுப்ரமணியம், பொன்ராம் தலைமை வகித்தனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வருவாய், காவல், சுகாதாரம் உட்பட அனைத்து அரசு துறைகளும் தற்போது செயல்படுகின்றன. நீதி துறையில் மட்டும் கோர்ட் திறக்காமல் உள்ளன. இதனால், வழக்குகள் முடிவுக்கு வராமல் வழக்குதாரர்களும், வக்கீல்களும் சிரமப்படுகின்றனர்,' என்றனர்.l அவிநாசி சப்-கோர்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வக்கீல் கனகராஜ் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் செல்வராஜ், முசாபர் ஆலம், திருமூர்த்தி, சாஜித் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X