பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு அரசாணை வெளியீடு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சென்ன : தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணை, நேற்று வெளியானது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, சில தளர்வுகளை, நேற்று முன்தினம் முதல்வர் அறிவித்தார்.இது தொடர்பான அரசாணை நேற்று வெளியானது. திருமணத்தில், 50 பேர்; இறுதி சடங்கில், 20 பேர் வரை பங்கேற்கலாம். அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கு, 31ம் தேதி வரை, தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்ப்பிணி பெண்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர், இதய நோய் உள்ள வர்கள், ௧௦ வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்,அவசர தேவை தவிர்த்து, வீடுகளில் இருந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

வெளியில் செல்லும் போது, முக கவசம் அணிய வேண்டும். குறைந்தது, 6 அடி துாரம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் துப்பினால், அபராதம் விதிக்கப்படும்.இது போன்ற விபரங்கள், அரசாணையில் இடம் பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X