வங்கி ஊழியர்கள் மூவருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் மூவருக்கு கொரோனா

Added : ஜூலை 31, 2020
Share

திருப்பூர்:காங்கயத்தில் வங்கி ஊழியருக்கு மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வங்கி மூடப்பட்டது.காங்கயம், சென்னிமலை ரோட்டில் உள்ள வங்கியில், 25 பேர் பணி புரிந்து வருகின்றனர். அதில், சூலுாரை சேர்ந்த, 41 வயது பெண், சிங்கநல்லுாரை சேர்ந்த, 24 வயது ஆண் மற்றும் பழநியை சேர்ந்த, 28 வயது பெண் ஆகியோர் வங்கியில் காசளராக உள்ளனர்.பரிசோதனையில், மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மூன்று பேரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் ஊழியர்கள் வங்கியை மூடினர். பேரூராட்சி நிர்வாகத்தினர், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூன்று நாட்கள் திறக்க கூடாது என அறிவுறுத்தி சென்றனர்.டாக்டருக்கு தொற்றுதிருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், குழந்தை நல டாக்டர்; உடுமலை அரசு மருத்துவமனையில், மருத்துவ பணியாளரான, 43 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X