தமிழ்நாடு

ஒதுக்கீடு: ராஜாங்குளத்தை சீரமைக்க நிதி...நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள ராஜாங்குளத்தை சீரமைப்பதற்காக, ரூ.1.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டிவனம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் மையப் பகுதியில் உள்ள ராஜாங்குளம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்திற்கு, மழைக்காலங்களில் மேல்பாக்கம் ஏரியிலிருந்து நிரம்பி வரும் நீர், திண்டிவனம் அய்யந்தோப்பு, மாரிசெட்டிக்குளம் வாய்க்கால் வழியாக, ராஜாங்குளத்தை வந்தடையும். மழைநீர் வரும் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகள் காரணமாக, ராஜாங்குளத்திற்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

குளம் சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் பல சமூக நல அமைப்புகள் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நிரந்தர தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், அப்போதிருந்த திண்டிவனம் சப் கலெக்டரின் தீவிர முயற்சியால், நகராட்சி, பொதுப்பணித்துறை, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து, ராஜாங்குளத்தை சுத்தப்படுத்தும் பணியை துவக்கினர். இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் போனது

.இதற்கிடையில், அமைச்சர் சண்முகம் கடந்த சில மாதங்களுக்கு முன், ராஜாங்குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் குளத்தை சீரமைத்து துார் வாருவது, குளத்தை சுற்றி நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக திண்டிவனத்தின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வரும் ராஜாங்குளத்தை, சீரமைப்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சார்பில் ஒரு கோடியே ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம், ராஜாங்குளத்தை ஆழப்படுத்தி, அதன் கரையை வலுப்படுத்துவது மற்றும் ராஜாங்குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்பட உள்ளது. திண்டிவனம் நகரப்பகுதியில், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வரும் ராஜாங்குளம் தற்போது, வறண்டு கிடக்கின்றது. மேலும் குளத்திற்கு வரும் நீர் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் துார்ந்து போய் உள்ளன. அமைச்சர் முயற்சியின் பேரில் ராஜாங்குளத்தை சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம், ராஜாங்குளம் புதுப்பொலிவு பெறுவற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X