சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு மிரட்டல்: 13 நபர்கள் மீது வழக்கு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வளவனுார் அருகே முன்விரோதத்தில் வீட்டை கொளுத்தியதை தட்டி கேட்ட பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.வளவனுார் அருகே பரசுரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி. இவரது மனைவி கோவிந்தம்மாள்,45; இவர்களது மகள் காவ்யா,22; இவரும் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மன் மகன் சீதாபதி,26; என்பவரும் காதலித்துள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்னையால் சீதாபதி கடந்த 11ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு, நரசிம்மன் மற்றும் அவரது குடும்பத்தார் நாகமணி, செல்வமணி, அபிமணி, தியாகு, விசு, கவுதம், ஜவகர், தீபா, கஸ்துாரி, கோபால், சிவபதி, சிவராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டை கொளுத்தியுள்ளனர். இதை தட்டி கேட்ட கோவிந்தம்மாளை, நரசிம்மன் உட்பட 13 பேரும் சேர்ந்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் காணை போலீசார் நரசிம்மன் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X