54 பேர் டிஸ்சார்ஜ்: திருப்பூரில் முன்னேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

54 பேர் 'டிஸ்சார்ஜ்': திருப்பூரில் முன்னேற்றம்

Added : ஜூலை 31, 2020
Share

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; குணமடைந்த, 54 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.திருப்பூரில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் இருவர்; தொழிலாளர் அலுவலகத்தில், 50 வயது பெண் அலுவலர் பாதிக்கப்பட்டனர்.காங்கயத்தில், ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியில், 41 வயது ஆண்; 29 மற்றும் 23 வயது பெண் பணியாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு, 873 ஆக உயர்ந்துள்ளது. கோவை மற்றும் திருப்பூரில் சிகிச்சை பெற்று வந்த, 54 பேர் நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். நேற்று மாலை வரை, 555 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 298 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X