பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை 'குடி'மகன்கள் வாட்டம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு நீட்டிப்பால், சென்னை மண்டலத்தில் உள்ள, 700 'டாஸ்மாக்' மது கடைகள், தற்போதைக்கு திறக்கப்படாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், 'குடி'மகன்கள் வாட்டத்தில் உள்ளனர்.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 மது கடைகள் வாயிலாக, தினமும், சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், ஐந்து மண்டலங்களாக செயல்படுகிறது.சென்னை மண்டலம், ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் உள்ள, 912 மது கடைகளில், தினமும் சராசரியாக, 25 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகும்.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மார்ச், 24 முதல், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

மே, 16ம் தேதி முதல், தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில், மது கடைகள் திறக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகரில், தொற்று பரவல் அதிகம் இருப்பதால், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட, 700 கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை.இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சென்னையில் உள்ள மது கடைகளும் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்மாதம், 31ம் தேதி வரை, மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 700 மது கடைகள், தற்போதைக்கு திறக்கப்படாத சூழல் உருவாகியுள்ளது.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பீர், ஆறு மாதங்கள் வரை நல்ல நிலையில் இருக்கும். மது வகைகளுக்கு, காலாவதி தேதி கிடையாது. எனவே, சென்னையில் மூடியுள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த பீர்கள் எடுக்கப்பட்டு, மற்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன; மது வகைகளை எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X