சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியுடன் வந்த நரிக்குறவரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நரிக்குறவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் நல்லாம்பூரான், 55; நரிக்குறவர். இவரது துப்பாக்கியின் உரிமத்தை புதுப்பிக்க விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நேரில் வருமாறு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.அதன்படி, நல்லாம்பூரான் தனது துப்பாக்கியுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த அலுவலர்கள் நல்லாம்பூரானை அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த நல்லாம்பூரான் அலுவலர்களிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை, அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X