தமிழ்நாடு

வங்கி கடன் திருப்பி செலுத்தும் அவகாசம்! ஓராண்டாக நீட்டிக்க வேண்டும்

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:ஊரடங்கு நீட்டிப்பு, தொடர் வர்த்தக பாதிப்பால், வங்கி கடன் திருப்பி செலுத்தும் அவகாசத்தை, ஓராண்டாக நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா கால சிக்கல்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த, ஆறு மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அவகாசம், இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. வரும் செப்., முதல், வங்கி கடன்களை திருப்பி
வங்கி கடன் திருப்பி செலுத்தும்  அவகாசம்! ஓராண்டாக நீட்டிக்க வேண்டும்

திருப்பூர்:ஊரடங்கு நீட்டிப்பு, தொடர் வர்த்தக பாதிப்பால், வங்கி கடன் திருப்பி செலுத்தும் அவகாசத்தை, ஓராண்டாக நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா கால சிக்கல்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த, ஆறு மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த அவகாசம், இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. வரும் செப்., முதல், வங்கி கடன்களை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.கடனை திருப்பி செலுத்த நாட்கள் நெருங்கும் நிலையில், போதிய நிதி இல்லாததால், என்ன செய்வதென தெரியாமல், தொழில்முனைவோர் மனதுக்குள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றனவே தவிர, முழுமையான இயக்கத்துக்கு இன்னும் வரவில்லை. பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் வரமுடிவதில்லை.
நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கடந்த கால வர்த்தக பாதிப்புகளிலிருந்து மீள, முயற்சிகளில், தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். தொழிலில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே, இழப்பை ஈடு செய்து, மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க முடியும்.வங்கி கடன் திருப்பி செலுத்த வழங்கப்பட்ட அவகாசம், இம்மாதத்துடன் முடிகிறது. ஆனால், கொரோனா பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடன் செலுத்த நிர்பந்தித்தால், தொழில் முனைவோரால், வர்த்தகத்தில் சிறப்பாக ஈடுபடமுடியாமல் போய் விடும்.
இழப்புகளை சரிசெய்ய முடியாமல், ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். தொழிலாளர், தொழில்முனைவோர் இருதரப்பினருமே, வங்கி கடனை செலுத்த முடியாத இக்கட்டான சூழலில் உள்ளனர். எனவே, வங்கி கடன் திருப்பி செலுத்தும், அவகாசத்தை, ஓராண்டாக நீட்டிக்க வேண்டும். வர்த்தகம் இயல்புக்கு திரும்பியபின், கடன்களை திருப்பிச் செலுத்த அனுமதிக்க வேண்டும்.இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் தமிழக முதல்வருக்கு, ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
01-ஆக-202011:34:33 IST Report Abuse
Ramona மத்திய அரசு இந்த விஷயத்தை உடனே கவனத்திற்கு கொண்டு வந்து, முடிவையும் உடனே எடுக்க வேண்டும், வழக்கமா அவகாசம் முடியும் நேரத்தில், சில நாட்களே இருக்கும் போது, கடன் வசூல் காலம் நீடித்து உத்தரவு இட கூடாது.sbi உங்கள் கடன் மாத தவணை காலம் நீடித்து விட்டது என்று எஸ் எம் எஸ், வந்தது, ஆனால் பணத்தை பிடித்து விட்டது, மத்திய அரசு மக்களுக்கு நல்லது செய்ய பெரும்பாடு படுகிறது, ஆனால் வங்கியின் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று இருந்து விடுவார்கள்..இதையே மல்லையா,சோக்ஸி,வீட்டு பணியாளர் இடம் இருந்து போன் வந்தா போதும், நடப்பதே வேறு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X