பொது செய்தி

தமிழ்நாடு

செவன்த் டே ஒயிட் பள்ளியில் கொரோனா நிவாரணம் வழங்கல்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி செவன்த் டே ஒயிட் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விக்கிரவாண்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள செவன்த் டே ஒயிட் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திரவியராஜ் தலைமைதாங்கினார். வளவனூர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச் பால்சன், கூட்டேரிப்பட்டு புனித ஜான்ஸ் பள்ளி நிர்வாக இயக்குனர் எஸ்ரா ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அதிசயம் வரவேற்றார். விக்கிரவாண்டியிலுள்ள முதியோர்களுக்கும் , ஏழைகளுக்கும் கொரோனா நிவாரண பொருட்களையும் சுகாதார நல உதவியாளர் படிப்புக்கான சான்றிதழ்களையும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழங்கி பேசினார்.கூட்டேரிப்பட்டு புனித ஜான்ஸ் பள்ளி முதல்வர் ஆனீ எவாஞ்சலின் கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார். உதவி தலைமை ஆசிரியை செல்வி,துறை தலைவர் சாம்செந்தில் , முதன்மை ஆசிரியர் காயத்ரி கைலாஷ் உட்பட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X