பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.58 லட்சம் கடனுதவி வழங்கல்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

செஞ்சி; செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கொரோனா சிறப்பு கடன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கொரோனா சிறப்பு கடன் வழங்கும் விழா மற்றும் மாற்று திறனாளிகளுக்கு மளிகை தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. இதில் 17 மகளிர் சுய உதவி குழுவினருக்கு கொரோனா சிறப்பு கடனாக 56.42 லட்சம் ரூபாய்க்கும், 5 மகளிர் குழுவினருக்கு சிறு வணிக கடனாக 1.60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், 210 மாற்று திறனாளிகளுக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங்., திண்டிவனம் சப் கலெக்டர் டாக்டர் அனு, திட்ட இயக்குநர் மகேந்திரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., ஏழுமலை, டி.எஸ்.பி., ராஜன், கூட்டுறவு சங்க தலைவர் ரங்கநாதன், செயலா ளர் ரவிச்சந்திரன், அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் கதிரவன், மாவட்ட துணை தலைவர் வேலன் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X