பராமரிப்பின்றி ராசாத்தா குட்டை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

அவிநாசி:திருமுருகன்பூண்டியின், பிரதான நீர்நிலை ஆதாரமான ராசாத்தா குட்டை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சியின் பிரதான நீர்நிலை ஆதாரமாக, ராசாத்தா குட்டை அமைந்துள்ளது. கணியாம்பூண்டியில் உள்ள நல்லாறு கிளையின் செக்டேமில் இருந்து, வெளியேறும் தண்ணீர், 5 கி.மீ., பயணித்து ராசாத்தா குட்டையில் சங்கமிக்கும்.கடந்த, 2014ல் பூண்டி ரோட்டரி சங்கத்தினர், இக்குட்டையை துார்வாரி சுத்தம் செய்தனர். அதன்பின், மழைநீர் தடையின்றி தேங்கியது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால், புதர்மண்டியது.இதனால், 5 லட்சம் ரூபாய் செலவில், குட்டையை துார்வாரி சுத்தப்படுத்த, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் திட்டமிட்டு, நேற்று பணியை துவக்கினர்.ரோட்டரி சங்க முன்னாள் உடனடி ஆளுனர் அருள்ஜோதி கார்த்திகேயன் தலைமை வகித்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். சுந்தரராஜ் அடிகளார் விளக்கேற்றி துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் ஹரிவீர விஜயகாந்த், செயலாளர் கதிர்வேல், பொருளாளர் ராமுசண்முகம் பேசினர்.பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் லதா, ராமசாமி, கோபால், பழனிசாமி, ரோட்டரி துணை கவர்னர் சிவசுப்ரமணியம், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் வெங்கட், விவேகானந்தன், ரவீந்திரன், மாவட்ட இன்டரேக்ட் சேர்மன் முருகானந்தன் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, ரோட்டரி திட்ட தலைவர் ராஜ்குமார், துணைத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X