இந்தியா

புதுச்சேரியில் ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று உச்சபட்சமாக 174 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 3,467 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் நேற்று 973 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 174 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இவர்களில் 83 பேர் கதிர்காமம் கோவிட் மருத்துவமனையிலும், 44 பேர் ஜிப்மரிலும், 8 பேர் கோவிட் கேர் சென்டரி லும்,13 பேர் காரைக்காலிலும், 26 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.பெண் பலிமுத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 56 வயது பெண் கடந்த 23ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மதியம் இறந்தார். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.டிஸ்சார்ஜ்மாநிலத்தில் இதுவரை 3,467 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகபட்சமாக கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 86 பேர், ஜிப்மரில் 42 பேர், கோவிட் கேர் சென்டரில் 8 பேர், காரைக்காலில் 6 பேர் என மொத்தம் 142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இடமாற்றம்கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 67 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அட்மிட்தற்போது கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 380 பேர், ஜிப்மரில் 353 பேர், கோவிட் கேர் சென்டரில் 286 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 73 பேர், மாகியில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீடுகளில் தனிமைமேலும், புதுச்சேரியில் 167 பேர், ஏனாமில் 11 பேர் என 178 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.ரிசல்ட் காத்திருப்புமாநிலத்தில் இதுவரை 38,734 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 34,606 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. 441 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X