இந்தியா

மொபட் மீது பைக் மோதல் முதியவர் பலி

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மொபட்டில் சென்ற முதியவர் பைக் மோதி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பட்டானுார் மாட்டுக்காரன்சாவடி 7-வது குறுக்கு தெருவை சேர்ந்வைர் தேவநாதன்,65; இவர் கடந்த 29ம் தேதி பிஒய்-01-பிஜெ-5830 பதிவெண் கொண்ட தனது மொபட்டில், சொந்த வேலையாக புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார்.புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே வந்தபோது, பின்னால் வந்த பிஒய்-01-சிவி-0363 பதிவெண் கொண்ட பைக் மோதியது.இதில் தடுமாறி கீழே விழுந்த தேவநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், தேவநாதனை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X