இந்தியா

புதுச்சேரி பல்கலையில் விருச்சுவல் பயிற்சி முகாம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி பல்கலையில் ராமானுஜம் பள்ளி கணக்கு துறை மற்றும் மாஸ் மீடியா மையம் சார்பில் காணொளி மூலம் மாணவர்கள் கற்றல், மதிப்பீடு என்ற தலைப்பில் 'விருச்சுவல் பயிற்சி முகாம்' நடந்து வருகிறது. முகாமில், இந்தியாவின் பிற பகுதியை சேர்ந்த பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் காணொளி மூலமாக சிறப்புரையாற்றி வருகின்றனர். கடந்த 21ம் தேதி துவங்கிய பயிற்சி முகாமை துணை வேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்து, பல்கலை கழக ஆசிரியர்கள் அனைவரும் முகாமில் பங்கேற்று, தொழில் நுட்ப அறிவை பெற்று மாணவர்களுக்கு காணொளி மூலம் பாடம் நடத்த முன் வரவேண்டும் என கூறினார். பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்து, இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பதி ராவ்பாதி, விஷ்ணு வர்தனன் ஆகியோர் முகாமின் நோக்கம் குறித்து பேசினர். இன்று வரை நடைபெறும் முகாமில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X