இந்தியா

ரெட்டியார்பாளையத்தில் கொரோனா விழிப்புணர்வு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ரெட்டியார்பாளையம் முகமை மாற்று மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆராய்ச்சி மைய நிறுவனர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உறுப்பினர் பாலமணிகண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி, ரெட்டியார்பாளையம் தேவா நகர், வயல்வெளி நகர், தியாகு பிள்ளை நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆர்சனிக் ஆல்பம் மாத்திரை, முக கவசம் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், தேவா நகர் குடியிருப்புச் சங்கத் தலைவர் அன்புச்செல்வம், ஹோமியோபதி மருத்துவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X