பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு குடிநீர் இணைப்பு முறைப்படுத்த அழைப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

திருப்பூர், ஆக. 1-'ஜல் சக்தி' இயக்கம் மூலம், மாநிலம் முழுதும், கிராமப்புறங்களில், வீடுகளுக்கு நேரடிக் குடிநீர் இணைப்பு வழங்க, முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.ஏற்கனவே, அங்கீகாரம் இன்றி, வீடுகளில், குடிநீர் இணைப்பு அளித்துள்ளவர்கள், முறைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
''ஊரகப்பகுதிகளில், வீட்டுக்குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து, ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல், வைப்புத்தொகை செலுத்தி, அங்கீகாரமில்லாத இணைப்புகளை முறைப்படுத்திக்கொள்ளலாம்'' என்று அதிகாரிகள் கூறினர்.இதற்கிடையே முறைப்படுத்தப்படாத குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் பணியில், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ''கொரோனா பரவல் தொடர்வதால், இப்பணியைத் தற்போது மேற்கொள்வதால், சிரமம் உள்ளது. இப்பிரச்னை முடிந்த பின், இப்பணியை மேற்கொள்ளலாம்'' என்று, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.----வெளிமாநில தொழிலாளர்பதிவு செய்வது கட்டாயம்திருப்பூர், ஆக. 1-தொழிற்சாலைகளில் பணிபுரியும், வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலகப் பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழிலகங்கள் போன்றவற்றில் பணிபுரியும், வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பதிவு செய்ய வேண்டியது, மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம் 1979ன் படி கட்டாயமாகும்.வெளிமாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தினால், ஒப்பந்ததாரர்களும் உரிய உரிமக்கட்டணம், காப்புத்தொகை செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

தவறினால், நிர்வாகத்தினர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யும்போது, வெளிமாநிலத் தொழிலாளர் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், மொபைல் போன் ணெ், வங்கிக்கிளை எண் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X