இந்தியா

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தாய்ப்பால் அவசியம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; தாய்ப்பால் மூலம் கொரோனா கிருமி பரவுவது கிடையாது. மாறாக அந்த கிருமிக்கான எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் என டாக்டர் ஆதிசிவம் தெரிவித்துள்ளார்.தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு ஜிப்மர் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை தலைவர் ஆதிசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாக 'ஆரோக்கியமான உலகிற்கு, தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்' என்ற தலைப்பு கடைப்பிடிக்கப்படுகிறது.குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் தாய்ப்பாலில் சரியான அளவில் நிறைந்திருப்பதால், குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, நெஞ்சில் சளி மற்றும் காதில் சீழ் போன்ற பொதுவான நோய்த் தொற்றுகள் ஏற்படாது.பச்சிளம் குழந்தைகளுக்கு மாட்டுப்பால், கிரைப் வாட்டர், பால் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் அன்னையருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.தாய்ப்பால் மூலம் கொரோனா கிருமி பரவுவது கிடையாது. மாறாக அந்த கிருமிக்கான எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும்.கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும், தாயையும் சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா காலத்தில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னர், தங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர் முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், குழந்தைக்கும் நல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X