பிளஸ் 1 தேர்வு முடிவில் திருப்பூருக்கு, 5ம் இடம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வு முடிவில் திருப்பூருக்கு, 5ம் இடம் 

Added : ஜூலை 31, 2020
Share

திருப்பூர்:பிளஸ் 1 தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்ட அளவில், 215 பள்ளிகளில் இருந்து, 25 ஆயிரத்து, 622 மாணவர்கள் 2019-20ம் கல்வியாண்டில் பிளஸ் 1 தேர்வு எழுதினர்.இதில், 24 ஆயிரத்து, 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு, 97.93 ஆக இருந்த தேர்ச்சி விகிதம், இந்தாண்டு, 97.41 சதவீதமாக குறைந்துள்ளது.வழக்கமாக திருப்பூர் மாவட்டத்திற்கு கைக்கொடுக்கும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இம்முறை கை கொடுக்கவில்லை. கடந்தாண்டு, 124 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. இம்முறை, 6 அரசு பள்ளிகள், 89 தனியார் பள்ளிகள், 6 சுயநிதி பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 103 பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன.தேர்ச்சி விகிதம் கடந்தாண்டில் இருந்து, 0.65 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் ஆராய்ந்து, இக்கல்வியாண்டில் தீர்வு காணப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலவலர் ரமேஷ் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X