இந்தியா

கொரோனா பரிசோதனை முகாம் நடத்த கோரிக்கை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'உப்பளம் தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்' என, தெற்கு மாநில தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி கோரிக்கை வைத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உப்பளம் தொகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பல இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.யாருக்கு கொரோனா தொற்று இருக்கிறது, யாருக்கு தொற்று இல்லை என்பது தெரியாமல் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.எனவே, உப்பளம் தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்தி மக்களின் அச்சத்தை போக்குவதற்கு முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ேஹாமியோபதி மாத்திரைகளை வீடு வீடாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.உப்பளம் தொகுதியில் தொற்றால் பாதித்தவர்கள், கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X