இந்தியா

சமையல் தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சமையல் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, மேரி உழவர்கரை குண்டு சாலை வீதியை சேர்ந்தவர் லட்சுமணன்,49; சமையல் தொழிலாளி. இவருக்கு ஜோஸ்பின் ராணி,40; என்ற மனைவியும், பிரபாகரன், திவாகர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.ஊரடங்கினால் வேலையில்லாமல் வீட்டில் இருந்த லட்சுமணன், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்த லட்சுமணன், மனைவி மற்றும் மகன்களை தாக்கி வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டு, கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.இதனால் ஜோஸ்பின்ராணி, தனது மகன்களுடன் பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.பெரிய மகன் பிரபாகர் மட்டும் இரவு 11.45 மணியளவில் தந்தையை பார்க்க வீட்டிற்கு சென்றார். அப்போது, லட்சுமணன், துாக்கில் இறந்த நிலையில் தொங்கினார்.தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார், லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X