இந்தியா

பெண் போலீஸ் வீட்டில் ரூ.75 ஆயிரம் திருட்டு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பெண் போலீஸ் வீட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் வீராம்பட்டினம் வீதியை சேர்ந்தவர் சிவசங்கரி,24; பெண் போலீசான இவர், தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார்.இவர், ஏலச்சீட்டில் எடுத்த ரூ.80 ஆயிரம் பணத்தை வீட்டு அலமாரியில் வைத்திருந்தார். அதில், கடந்த 19ம் தேதி 5,000 ரூபாயை மட்டும் செலவிற்கு எடுத்து சென்றார். அன்று மதியம் 1:45 மணிக்கு வந்து பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை காணவில்லை. சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X