இந்தியா

புதுச்சேரி பொறியியல் கல்லுாரியில் காணொளி வழி சர்வதேச மாநாடு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி பொறியியல் கல்லுாரியின் கணிப்பொறித் துறை சார்பில் கணிப்பணிகளில் பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து காணொளி வழி சர்வதேச மாநாடு நடந்தது.மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி தரமேற்றுதல் நிதி உதவியுடன் நடந்த இரண்டு நாள் மாநாட்டில் 79 ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளில் 49 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களால் படிக்கப்பட்டது.மாநாட்டை கல்லுாரி முதல்வர் கோதண்டராமன், பதிவாளர் விவேகானந்தன், தொழில்நுட்ப கல்வி தரமேற்றுதல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், கணிப்பொறித்துறை தலைவர் மனோகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் சங்கரநாராயணசாமி இணைய தள வழியாக வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பதிவாளர் அகிலா, பெங்களூர் ஐ மொபி நிறுவனத்தின் நிர்வாகி வீனா சேதுராமன், திருவனந்தபுரம் தேசிய விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்துறையின் வான் பயண மின்னணு துறையின் தலைவர் மனோஜ், வேலுார் தொழில் நுட்பக்கழகத்தின் கண்ணன் ஆகியோர்துறையில் உள்ள நவீன வளர்ச்சிகள் பற்றிபேசினர்.மாநாட்டில் ஷார்ஜா, சவுதி அரேபியா, செக் குடியரசு, அமெரிக்கா மற்றும் ஓமன் நாடுகளிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது கண்டுபிடிப்புகள் குறித்து கலந்துரையா டினர்.ஏற்பாடுகளை கணிப்பொறி துறையின் பேராசிரியர்கள் ஷாலினி, சரளா, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X