இந்தியா

கொரோனா பரிசோதனை முகாம் முதல்வர் துவக்கி வைப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; குயவர்பாளையத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடந்தது.ஜீவா ருக்மணி சினிமா தியேட்டர் வளாகத்தில் நடந்த முகாமை, முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார், இந்திய முறை மருத்துவ இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா நோடல் அதிகாரி ரமேஷ், கோவிட் பொறுப்பு டாக்டர் ஜான்சன் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தின் பொறுப்பு மருத்துவ அதிகாரி அஸ்வினி வரவேற்றார். பொது சுகாதார செவிலியர் கீதா நன்றி கூறினார்.முகாமில், கொரோனாவால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்தவர்கள் உட்பட 185 பேருக்கும், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 57 பேருக்கும் உமிழ்நீர் மாதிரியை மருத்துவக் குழுவினர் சேகரித்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், ஐ.டி.எஸ்.பி., ரமேஷ் உள்ளிட்ட ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X