இந்தியா

முதல்வர் நிவாரண நிதி செலவினம் வெள்ளை அறிக்கை கேட்கிறது பா.ஜ.,

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முதல்வர் நிவாரண நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண பொருள்கள் போதுமானதாக இல்லை. வருவாய்த்துறை மூலம் ஒரு வீட்டிற்கு தடுப்பு வேலி அமைக்க ரூ.5000 வரை செலவு செய்யும் அரசு, அதற்கு மாறாக அந்த வீட்டில் சிகப்பு நிற பெரிய போஸ்டரை ஒட்டி இந்த பணத்தை அவர்களுடைய நிவாரண செலவிற்கு பயன்படுத்த கொடுக்கலாம்.அவர்கள் சுய கட்டுப்பாட்டோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மீறுபவர்களை பற்றி போலீசில் தகவல் தெரிவிக்க அக்கம் பக்கத்தினரிடம் தகவல் பெறலாம். நோயினால் பாதித்த மக்களுக்கு அரசு உதவிகரமாக செயல்பட வேண்டும்.முதல்வர் ஆயிரம் படுக்கை வசதி தயார் செய்து உள்ளதாக கூறியுள்ளார். ஆயிரம் படுக்கை வசதி எங்கே தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உண்டான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உபகரணங்கள் எங்கு உள்ளது. எவ்வித ஏற்பாடும் இல்லாமல் அரசியலுக்காக வெற்று அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றுவதை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு. செலவிடப்பட்ட விபரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. ஆதலால், தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X