இந்தியா

தனியார் மருத்துவ கல்லூரிகளில் : அன்பழகன் எம்.எல்.ஏ., கேள்வி

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை பெற உரிய சட்டத்தை கொண்டு வராமல் மாணவர்களை, காங்., அரசு வஞ்சித்து வருகிறது என அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மருத்துவ கல்விக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுள்ளது.மத்தியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக, காங்,, மற்றும் பா.ஜ., ஆட்சிகளில் அங்கம் வகித்த தி.மு.க, அதற்காக எந்த சட்டமும் கொண்டு வர முயற்சி செய்யாமல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு துரோகத்தை இழைத்தது. ஆனால் இன்றைக்கு ஏதோ பிற்படுத்தப்பட்டவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போன்று காட்டிக் கொள்ள போலி நாடகம் ஆடத் தொடங்கியுள்ளது.புதுச்சேரியில், தி.மு.க., துணையோடு ஆட்சி நடத்தும் காங்., கட்சி, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை பெற எவ்வித நடவடிக்கையும், உரிய சட்டத்தையும் கொண்டு வராமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது.மத்திய அரசின் மருத்துவ கவுன்சில் கழகத்தின் ஆணைப்படி 50 சதவீத இடங்களை பெறாமல் வெறும் 35 சதவீத இடங்களை ஆண்டுதோறும் பெறப்படுகிறது.புதுச்சேரியில் தி.மு.க., துணையோடு ஆட்சி நடத்தும் காங்., அரசில், தனியார் மருத்துவக் கல்லுாரியில் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதம் கிடைக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கூட்டணி காங்., அரசை வலியுறுத்தாதது ஏன் என்பதை தி.மு.க., தெளிவுப்படுத்த வேண்டும்.ஏழை மாணவர்கள் நலனுக்காக எதிராக புதுச்சேரியில் தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சி நடந்து வருவதை மாணவ சமுதாயம் மன்னிக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X