இந்தியா

லாரி மோதி வாலிபர் பலி

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பைக் - ஸ்கூட்டி உரசிக் கொண்டதில் தவறி விழுந்த வாலிபர் லாரி மோதி இறந்தார்.வேல்ராம்பட்டு, ஆதிமூலம் நகர் நடராஜன் மகன் சதீஷ்குமார்,28; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் தனத பிஒய்-01-சி.எஸ்-6055 பதிவெண் கொண்ட டி.வி,எஸ்., அப்பாச்சி பைக்கில் வேலைக்கு புறப்பட்டார்.முதலியார்பேட்டை ஆர்.டி.ஓ., அலுவலகம் மேம்பாலம் அருகே வந்தபோது, அவரையொட்டி வந்த பிஒய்-5ஏ-0844 பதிவெண் கொண்ட ஸ்கூட்டி வந்தது. எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டன.அதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். வலதுபுறம் விழுந்த சதீஷ்குமார் எழ முயற்சிப்பதற்குள் பின்னால் வேகமாக வந்த டிஎன்-04-ஏஎஸ் -4330 பதிவெண் கொண்ட லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து லாரி டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த உதயகுமார்,20; ஸ்கூட்டி ஓட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X