இந்தியா

சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி மேல்நிலை தேர்வில் சாதனை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

நெட்டப்பாக்கம்; சூரமங்கலம் ஸ்ரீ ஜெயதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி பிரியதர்ஷினி 538, மாணவர் முருகதாஸ் 518, மாணவி ஷமிரா 502 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பள்ளியில் 500க்கு மேல் 3 பேரும், 450 க்கு மேல் 6 பேரும், 400 க்கு மேல் 12 மாணவர்கள் பெற்றுள்ளனர்.பாடவாரியாக தமிழ் 96, ஆங்கிலம் 93, வணிகவியல் 96, கணக்கியல் 96, பொருளியல் 94, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 95 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவி முத்துலட்சுமி 565, மாணவி பூமிகா 544, மாணவி அபிநயா 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். மாணவி முத்துலட்சுமி கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.பொதுத் தேர்வுகளில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி சேர்மன் மணி, பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் விஜயா மணி ஆகியோர் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.பள்ளி நிர்வாகி விஜயா மணி கூறுகையில், நமது பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன், நீட், ஐஐடி, ஜே.இ.இ மெயின் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு NIFT மற்றும் NID வகுப்புகளும், 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பைஜஸ் வகுப்புகள் நடத்தப்படுகிறது.மேலும் விசாலாமன விளையாட்டு திடலில் மாணவர்களுக்கு யோகா, விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேல்நிலை படிப்பிற்கு சலுகை வழங்கப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X