இந்தியா

நகராட்சி ஊழியர்கள் சம்பளம் வழங்காததால் போராட்டம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; உழவர்கரை நகராட்சியில் ஜூலை மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து, அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கன்வீனர் சகாயராஜ் முன்னிலை வகித்தார்.தலைமை தாங்கிய கன்வீனர் பழனிவேலு பேசியதாவது;கொரோனா பரவலை தடுக்க சுகாதாரம் காக்கும் நகராட்சி ஊழியர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகிறது.ஆனால் நகராட்சி ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கிட புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு வந்த வருவாய் பிரிவு பத்திர விற்பனை பங்கு தொகையினை வழங்கிட, கலெக்டர் உத்தரவிட்டு ஒரு வாரமாகியும் நிதித்துறை செயலர் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் நகராட்சி நிர்வாகங்களின் மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றார்.கன்வீனர் முனியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X