கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு மாற்றம்

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஜெய்ப்பூர் : சச்சின் பைலட் கோஷ்டியினர், கெலாட் ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதை தடுக்க, அவர்கள், ஜெய்ப்பூரிலிருந்து, ஜெய்சால்மருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில், முதல்வர் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக, சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இதையடுத்து, கெலாட் ஆதரவு காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.'நோட்டீஸ்'இந்நிலையில், சச்சின் பைலட் கோஷ்டியினர், கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுப்பதை தடுக்க, நேற்று அவர்கள் ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள், கடந்த ஆண்டு, காங்கிரசில் இணைந்தனர். இதை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.இது பற்றி விளக்கம் கேட்டு, சபாநாயகர் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு, உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது. இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட், 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: ராஜ்யசபாவில், தெலுங்கு தேசம் கட்சியின் நான்கு, எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் சேர்ந்தனர். அவர்கள் பா.ஜ., எம்.பி.,க்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.

அந்த இணைப்பு சரியென்றால், பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைந்ததும் சரிதான். மூன்றில், இரண்டு பங்கு உறுப்பினர்கள், வேறு கட்சியில் இணைந்தால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.இவ்வாறு, கெலாட் கூறியுள்ளார். இதற்கிடையே, பைலட் உட்பட, 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, சபாநாயகர் ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.மனு தாக்கல்இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷியும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபையை வரும், 14ம் தேதி முதல் கூட்ட, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றி நேற்று முன்தினம் பேட்டியளித்த, முதல்வர் கெலாட், 'சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர முடிவு செய்துள்ளேன். இப்போது என் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் விலை, 15 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது' என்றார். ராஜஸ்தான் போலீசாருக்கு அனுமதி மறுப்புசச்சின் பைலட், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரும், ஹரியான மாநிலம், குர்கான் மற்றும் மனேசரில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில், பன்வாரிலால் சர்மா, விஸ்வேந்திர சிங் இருவரும், பா.ஜ.,வுடன் சேர்ந்து, கெலாட் ஆட்சி கவிழ்க்க, சதி திட்டம் தீட்டியுள்ளதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் பற்றி, மாநில சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக கோரி, இரண்டு எம்.எல்.ஏ.,க்களிடமும், 'நோட்டீஸ்' வழங்க, ராஜஸ்தான் போலீசார், குர்கான், மனேசருக்கு சென்றனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ள ஓட்டல்களுக்குள், ராஜஸ்தான் போலீசாரை அனுமதிக்க, ஓட்டல் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-ஆக-202018:46:43 IST Report Abuse
RajanRajan பேசாம அத்தினி பேரையும் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கொண்டு போயி பத்திரமா வச்சுக்கோங்க. யார் வேணாம்னு சொன்னாங்க. திருட்டு கும்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X