மத கலவரத்தை துாண்ட சதி சினிமா இயக்குனர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத கலவரத்தை துாண்ட சதி சினிமா இயக்குனர் கைது

Added : ஜூலை 31, 2020
Share
சென்னை : கருப்பர் கூட்டம், 'யூ டியூப் சேனல்' நிர்வாகிகளுக்கு ஆதரவாக பேசிய, இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார். ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, கருப்பர் கூட்டம் என்ற பெயரில், யு டியூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக, சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49, போரூர் அடுத்த, ராமாபுரம் சுரேந்திரன் நடராஜன், 36, உள்ளிட்ட நான்கு பேரை,

சென்னை : கருப்பர் கூட்டம், 'யூ டியூப் சேனல்' நிர்வாகிகளுக்கு ஆதரவாக பேசிய, இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, கருப்பர் கூட்டம் என்ற பெயரில், யு டியூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக, சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49, போரூர் அடுத்த, ராமாபுரம் சுரேந்திரன் நடராஜன், 36, உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் நடராஜன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த, பாரத் முன்னணி என்ற அமைப்பு நிர்வாகி சிவாஜி என்பவர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர், வேலு பிரபாகரன், 63. இவர், சென்னை, மதுரவாயலில் வசிக்கிறார். இவர், சமூக வலைதளத்தில், வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்து மதம் மற்றும் அதை பின்பற்றுவோரை இழிவுபடுத்தி பேசியுள்ளார். அவர் தொடர்ந்து, இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருகிறார்.அத்துடன், கருப்பர் கூட்டம் நிர்வாகிகளின் செயலை நியாயப்படுத்தி, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வீடியோ வெளியிட்டுள்ளார்.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, மத கலவரத்தை துாண்ட வேண்டும் என்பதே, வேலு பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகளின் நோக்கமாக உள்ளது. அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், வேலு பிரபாகரன் மீது, மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தல், சதி திட்டம் தீட்டுதல் உட்பட, ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X