கள்ளச் சாராயத்தால் 21 பேர் பலி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
சண்டிகர் : பஞ்சாபில், கள்ளச் சாராயம் குடித்து, 21 பேர் பலியாயினர். இது தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்., அரசு அமைந்துள்ளது. இங்கு, கள்ளச் சாராயம் குடித்து, 21 பேர் பலியாயினர். இது குறித்து, போலீசார் கூறியதாவது:அமிர்தசரஸ், படாலா, தர்ன் தரன் மாவட்டங்களில், நேற்று

சண்டிகர் : பஞ்சாபில், கள்ளச் சாராயம் குடித்து, 21 பேர் பலியாயினர். இது தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்., அரசு அமைந்துள்ளது. இங்கு, கள்ளச் சாராயம் குடித்து, 21 பேர் பலியாயினர். இது குறித்து, போலீசார் கூறியதாவது:அமிர்தசரஸ், படாலா, தர்ன் தரன் மாவட்டங்களில், நேற்று முன்தினமும், நேற்றும் கள்ளச் சாராயம் குடித்ததால், 21 பேர் இறந்துள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக, முச்சால் கிராமத்தை சேர்ந்த, பல்விந்தர் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங், 21 பேர் பலியானது குறித்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில், கள்ளச் சாராய உயிர்ப்பலிக்கான உண்மை காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து, உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X